நபார்டு வங்கியில் Assistant பணி


நபார்டு வங்கியில் Assistant பணி

நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
Development Assistant பிரிவில் 82 பணியிடங்களும், Development Assistant (Hindi) பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:
1. Development Assistant: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2.  Development Assistant (Hindi) ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.9.2019 தேதிப்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி அனைத்து பிரிவினருக்கும் உச்ச வயதுவரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: ரூ.14,650 - ரூ. 34,900.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.450. SC மற்றும் ST பிரிவினர்களுக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும்.


விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post