தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள கூட்டுறவு
சங்கங்களில் கீழ்கண்ட 90 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவியாளர்
காலியிடங்கள்: 90(UR-27, BC-24, BCM-3, MBC/DNC-18,
SC-14, SCA - 3, ST - 1)
சம்பளவிகிதம்: 14,000 - 47,500
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது
பூர்த்தியடைந்தவராகவும், 1.1.19 தேதியின்படி 30 வயதிற்குள்ளும் இருக்க
வேண்டும். BC/BCM/MBC/DC/SC/SCA/ST/PWD/EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
பொதுப்பிரிவைச் சார்ந்த
EX-SM பிரிவினர்களுக்கு 48 வயதிற்கு
மிகாமல், மாற்றுத்திறனாளிகள் 40 வயதிற்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழை ஒரு
பாடமாகக் கொண்டு 10.ம்
வகுப்பு அல்லது +2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று
கணினியில் பணிபுரியும் திறன்
பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும்
நேர்முகத்தேர்வில் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.எழுத்துத்தேர்வில் கூட்டுறவு மேலாண்மை,
கூட்டுறவு கடன் மற்றும்
வங்கியியல், கூட்டுறவு கணக்கியல்,
அடிப்படை கணினி அறிவு,
பொது அறிவு மற்றும்
பொதுத்தமிழ் பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறுவது தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத்தேர்வுகளுக்கான நுழைவுச்
சீட்டை இணையதளத்திலிருந்து டவுண்லோடு
செய்யலாம்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: தஞ்சாவூர்
விண்ணப்பக் கட்டணம்
ரூ.
250 இதனை ஆன்லைன் முறையில்
செலுத்த வேண்டும். ஆதரவற்ற
விதவைகள் / SC / SCA / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
கிடையாது
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.tnjdrb.in என்ற
இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது புகைப்படம், கையொப்பம்
மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில்
விண்ணப்பித்தவுடன் படிவத்தை
டவுண்லோடு செய்து பிரிண்ட்
அவுட் செய்து கைவசம்
வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.9.2019
மேலும்
கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட
இணையத்தளத்தைப் பார்க்கவும்.