டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வு: சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள்டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வு: சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள்

 குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடக்கிறது. வசதி இல்லாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு தேர்வாணையத்தால் குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 1536 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம். சார்பில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அதன் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிவிப்பு:

தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ள காலி பணியிடங்களுக்கு முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறும்.

தேர்வு பெற்ற மாணவர்கள் முனிசிபல் கமிஷ்னர், துணை பதிவாளர், தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு துறை சீனியர் ஆய்வாளர், தொழிலாளர் துறை ஆய்வாளர், வருவாய்த்துறை ஆய்வாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி பொதுவான பட்டப்படிப்பு என்றாலும், வயது உச்ச வரம்பு ஏதுமில்லாமல் போட்டியிடமுடியும். முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மட்டும் வயது உச்ச வரம்பு 48. மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளம் ( www.tnpsc.gov.in) பார்க்கவும். முதல் நிலைத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றாலே அடுத்த நிலைக்கு முன்னேறலாம்.

குருப் 2 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாணவர்களுடைய திறமையை மேலே கொண்டு வரும் வகையில் கலந்துரையாடல் வடிவத்தில் நடைபெறும். தேர்வில் வெற்றி பெற்று பணியிடம் பெற்ற முன்னால் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் வகுப்பை நடத்திச் செல்வர்.

இவ்வகுப்புகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் ஆண்டுதோறும் இணைந்து நடத்தி வருகிறோம். தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட ஏனைய பின்தங்கிய அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் திட்டமிட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளாக கிடைத்த முன் அனுபவத்தை கொண்டு சிறப்பான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 மணிமுதல் 5.00 மணிவரை கலந்துரையாடல் வடிவத்தில் நடைபெறும். கலந்துரையாடலின் சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் போட்டியில் அதிகபட்ச பலத்தோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது தான்.


பயிற்சி நடைபெறும் இடம்:
Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்.
சிஐடியு அலுவலகம்.
No. 6/9. கச்சாலீஷ்வரர் கோயில் அஹ்ராகரம்,
ஆர்மேனியன் தெரு,
பாரிஸ்டர் கார்னர்,
சென்னை- 600001.

பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.
பாலாஜி: 90432 29495.
மோகன். 98847 47217.
வாசுதேவன். 94446 41712.


பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் குருப் 2 வின் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post