10.ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF.ல் வேலை; காலியிடங்கள்: 914


10.ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF.ல் வேலை; காலியிடங்கள்: 914

மத்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான CISF.ல் Constable (Tradesmen) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Constable (Tradesmen)
மொத்த காலியிடங்கள்: 914
சம்பளம்: 21,700 - 69, 100
வயது: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது நல்ல பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு (Tradetest) உடற்தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.எழுத்துத்தேர்வில் 10.ம் வகுப்பு தகுதி அடிப்படையில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும். தொழிற்திறன்  சம்மந்தப்பட்ட தொழிலில் விண்ணப்பதாரரின் திறமையை பரிசோதிக்கும் வகையில் செய்முறை பயிற்சி நடத்தப்படும்.
உடற்தகுதி:
1. உயரம்: 170 செ.மீ இருக்க வேண்டும்(ST - 162.5 செ.மீ)
2. மார்பளவு - 80செ.மீ அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். S T பிரிவைச் சேர்ந்த ஆண்கள் 76செ.மீ அகலமுள்ள மார்பளவுடன் 5செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: 1.6 கிலோமீட்டர் தூரத்தை 61/2 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரம் மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்து தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.100 மட்டும் கட்டணத்தை Indian Postal Order ஆக எடுத்து அனுப்பவும்.

IPO எடுக்க வேண்டிய முகவரி:
“Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai”.
SC/ST பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
www.cisfrectt.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்தி தேவையான சான்றிதழ்களின் சுய ட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து தபால் மூலம் 22.10.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The DIG, CISF (South Zone) HQrs, “D” Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai – 6000090 Tamilnadu.

Name of Post / Trade
No.of.Post
Total
Direct
ESM
Const. / Cook
315
35
350
Const. / Cobbler
12
1
13
Const. / Barber
98
11
109
Const. / Washer – man
120
13
133
Const. / Carpenter
13
1
14
Const. / Sweeper
243
27
270
Const. / Painter
5
1
6
Const. / Mason
4
1
5
Const. / Plumber
4
0
4
Const. / Mali
4
0
4
Const. / Electrician
3
0
3
Total
821
90
911
Back-log Vacancies
Const. / Cobbler
1
0
1
Const. / Barber
2
0
2
Total
3
0
3
G. Total
824
90
914

0/Post a Comment/Comments

Previous Post Next Post