அறிவியல் உலகம்

அறிவியல் உலகம்

Ø ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற அதிக மின் தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்.

Ø பாசி மற்றும் பூஞ்சையின் கூட்டு வாழ்க்கை லிச்சென்ஸ் என்று அழைக்கப்படுகிறது

Ø மரத்தின் வளையங்களை எண்ணி அதன் வயதை அறியும் முறை டென்டிரோகிரானாலஜி என்றழைக்கப்படுகிறது.

Ø மிகச்சிறிய பூ - டக்விட், மிகப்பெரிய பூ - ரக்ளேசியா, 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ - காக்டஸ், மலர்ந்து மூன்று நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கும் பூ - பார்லி, மிகப்பழமையான பூ - கூனியாரா, அதிக அளவில் பூக்கும் பூ - ஆர்கிட்ஸ்.

Ø ஒட்டகத்தின் உடலானது வளைந்து, நெளிந்து காணப்பட்டாலும் எலும்பானது நேராகத்தான் இருக்கும்.

Ø கற்றாழையின் ஜெல்லில் 96% நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே வறண்ட சூழலிலும் தாக்குப்பிடித்து வளர காரணமாகிறது.

Ø காச நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளான் உள்ளது.

Ø தனிமம்: துத்த நாகம் (Zn), அணு எண்: 30,  அணு நிறை:65.38

Ø மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு, உணவு உற்பத்திக்கும் இடையிலான கணிதத் தொடர்பை தோமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவர் வழங்கினார். இவர் 1798.ம் ஆண்டு மக்கள் தொகைக் கோட்பாடு பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்

Ø மண்புழுவிற்கு சுவாச உறுப்புகளான செவுள்கள் மற்றும் நுரையீரல் கிடையாது. உடற்சுவரின் வழியே சுவாசிக்கிறது.


Ø ஒரு நேர்க்குத்தானே குழாயில் நீர்மம் மேலேறுவது அல்லது கீழிறங்குவது நுண்புழை நுழைவு அல்லது நுண்புழைச் செயல்பாடு எனப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post