திரிகடுகம் தொடர்பான செய்திகள்:


திரிகடுகம் தொடர்பான செய்திகள்:


·        திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

·        திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.

·        திரி - மூன்று

·        கடுகம் - காரமான பொருள்.

·        இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.

·        இவரின் சிறப்புப் பெயர் செரு அடுதோள் நல்லாதன்.

·        செரு அடுதோள் நல்லாதன் என #பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

·        இவரின் ஊர்ப்பெயர் - திருத்து (திருநெல்வேலி மாவட்டம்)

·        இவர் வைணவ சமயத்தைத் தழுவியவர்.

·        இந்நூல் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.

·   ஒவ்வொரு பாடலின் மூன்றாம் அடியில் 'இம் மூவர்" அல்லது 'இம் மூன்றும்" என வருவது சிறப்பு.

·   திரி என்ற சொல்லுக்கு திரித்தல், விளக்குத்திரி, மூன்று போன்ற பொருள் பல உண்டு.

·        அம்மை என்னும் வனப்பு வகையைச் சார்ந்த நூல்.

·        இந்நூலில் 100 வெண்பா பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

  •        சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல், இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்து அமைந்தமையால் இநூல் திரிகடுகம் எனப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post