8,826 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

8,826 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) நடத்தப்படும் 8,826 இரண்டாம் நிலைக்காவலர்களுக்கான தேர்வு வரும் 25-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தரவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான விளம்பரத்தினை 06.03.2019 அன்று வெளியிட்டது.

இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை உட்பட 32 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இக்குழும இணையதளத்தில் இன்று (13.08.2019) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org இணையதளத்தில் தமது பயனர் அடையாள எண் (user ID) மற்றும் கடவுச் சொல்லைப் (password) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உரிய செலுத்தும் சீட்டு பெற்றிருந்தும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உதவி மைய தொலைபேசி எண்கள் 044-40016200 மற்றும் 9789035725-ல் தொடர்பு கொள்ளலாம்


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post