Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

17 அறிவுரைகள் – இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் தேர்வுக்கு செல்வோர்க்கு





1. விண்ணப்பதாரர் தேர்வுகூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்த பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள அவரது விவரங்களை சரிபார்க்கவும்
2. விண்ணப்பதாரர் தேர்வுகூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது.
3. தேர்வு கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.
4. விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டை ஏதும் இருப்பின் அவற்றின் நகலை கொண்டு வருவது உகந்தது (உதாரணம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை etc…)
5. தேர்வு தொடங்கியப்பின், விண்ணப்பதாரர் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்.
6. செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
7. விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேண கொண்டு வரவேண்டும்
8. OMR விடைத்தாளில் எழுதவோ அல்லது பட்டை தீட்டவோ Pencil கண்டிப்பாக  பயன்படுத்தக் கூடாது.
9. விண்ணப்பதாரர் தனது சேர்க்கை எண் (Enrolment Number) மற்றும் விடைத்தாளின் வகையை (Series of Question Booklet i.e A or B or C or D) சரியாக எழுதி பட்டை தீட்ட வேண்டும்.
10. விண்ணப்பதாரர் தனது பெயரையோ அல்லது மற்ற விவரங்களையோ விடைத்தாளில் எழுதக்கூடாது.




11. விண்ணப்பதாரர் ஒரு வினாவிற்கு ஒரு விடையை மட்டுமே பட்டை தீட்ட வேண்டும்.
12. OMR விடைத்தாளை மடிக்கக்கூடாது.
13. OMR விடைத்தாள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்படும்.
14. விண்ணப்பதாரர் தேர்வு நேரத்தில் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார் மேலும் தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ கூடாது.
15. வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விக்குறிய விடைகளை விண்ணப்பதாரர் சரிப்பார்த்துக் கொள்வதற்கு 27.08.2019 அன்று www.tnusrbonline.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் விண்ணப்பதாரர் கேள்விகள் மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடு இருப்பதாக தெருவிக்க விரும்பினால் அவற்றிற்கான முறையீட்டை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக 03.09.2019க்குள் இக்குழும அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
16. குறிப்பு:  எழுத்துத்தேர்வுக்கு பின்னர் நடைபெறும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்குப் பின்னர் தங்களது விண்ணப்பதாரர் நிலை உறுதி செய்யப்படும்.
Note: Your candidature will be confirmed only after completion of the original certificate verification which will be held after the written examination.
17. உங்களது நுழைவுசீட்டில் புகைப்படம் இல்லாமல்லிருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல்லிருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புஹாய்ப்படத்தினை ஒட்டி அதில் A அல்லது B பிரிவு அழுவலரிடம் சான்றெப்பம் பெற்று வரவேண்டும்




Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]