சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி

சென்னையிலுள்ள "Chennai Metro Rail Limited"-ல் உதவித்தொகையுடன் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்து அதே நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்பின் பெயர்: PG Diploma in Metro Rail Technology and Management
கால அளவு: ஒரு வருடம்
காலியிடங்கள்: 25 (civil - 16, Electrical - 5, Electronics - 3, Mechanical - 1)
வயது: 29.5.2019 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Civil / Mechanical / Electrical / Electrical & Communication Engineering பாடப்பிரிவில் 70% (SC / ST - 65%) மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 20,000
குறிப்பு: இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் GATE தேர்வின் மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ படிப்புடன் Executive Trainee பயிற்சி வழங்கப்படும்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு "Chennai Metro Rail Limited"-ல் Assistant Manager ஆக பணி அமர்த்தப்படுவர். ரூ. 40,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.6.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post