LIC.ல் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பணி

LIC.ல் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பணி

LIC Housing Finance.ல் கீழ்கண்ட பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர்: Director Marketing Executive
சம்பளவிகிதம்: ரூ.15,000-20,000
வயதுவரம்பு: 30.4.2019 தேதியின்படி 21 முதல் 35 வயத்திற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அணுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Marketing / Finance பாடப்பிரிவில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.lichousing.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post