அணுசக்திக் கழக மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் பணி

அணுசக்திக் கழக மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் பணி

அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்படும் Dr. B. Borooah Cancer Institute-ல் கீழ்கண்ட பணிகளுக்கு தேவையான 23 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள்: 17
சம்பளம்: ரூ. 17,790
கல்வித்தகுதி: Nursing பாடப்பிரிவில் B.Sc. பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.  பணியின் பெயர்: ICU Technician
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 15,180
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் B.Sc பட்டம் பெற்று ICU / Respiratory Therapy Technology பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Physiotherpaist
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 17,790
கல்வித்தகுதி: அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சியுடன் Physiotherapy பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ / இளநிலைப்பட்டம் பட்டம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Speech and Swallowing Therapist
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 17,790
கல்வித்தகுதி: Speech and Language Therapy படிப்பை முடித்து Speech and Language Therapy Registration Board / Council.ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

5.  பணியின் பெயர்: Social Investigator
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 18,000
கல்வித்தகுதி: MSW படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Clinical Coordinator
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 10,000
கல்வித்தகுதி: Biology - யை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சியுடன் அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் Computer Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு / Computer Typing Test-க்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்: 7.6.2019

நேர்முகத்தேர்விற்கான நாள் மற்றும் நேரம் பற்றிய விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்: 11.6.2019

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.bbcionline.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Dr. B. Borooah Cancer Institute,
Gopinath Nagar,
AK Azad Road,
Guwahati 781 016.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.5.2019


மேலும் கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post