10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் செய்லர் பணி

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் செய்லர் பணி

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailors பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Sailors [Matric Result (Musician)]
சம்பளவிகிதம்: ரூ. 21,700 - 69,000
வயது: 1.10.1994-லிருந்து 30.9.2002.க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hindustani / Carnatic / Classical Music துறையில் பயிற்சி பெற்று Keyboard / String / Wing Instruments போன்ற இசைக்கருவிகளை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

உடல்தகுதி
விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரம் பெற்றிக்க வேண்டும். மேலும் உயரத்திற்கேற்ற எடையையும் பெற்றிருக்க வேண்டும்.

உயரத்திற்கேற்ற எடை மற்றும் மார்பளவில் 5செ.மீ சுருக்கி விரியும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி
1.6 செ.மீ  தூரத்தை 7 நிமிடத்திற்குள் ஒட்டிக்கடக்க வேண்டும்.
20Swuat ups மற்றும் Push - ups எடுக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒடிசா மாநிலம் INS Chilka - வில் 15 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு மும்பையில் 26 வாரங்கள் ராணுவ இசைக்கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பிறகு நிரந்தர பணியில் பணி அமர்த்தப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ. 14,600 உதவித் தொகையாக வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: மும்பை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் வைத்து நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.5.2019


மேலும் கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post